தமிழகத்தை தொடர்ந்து மஹாராஷ்டிராவிலும் ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு!
தமிழக சட்ட பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது மஹாராஷ்டிராவிலும் நீட் தேர்வுக்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஆள்மாறாட்டம், வினாத்தாள் லீக் போன்ற முறைகேடுகளும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயில்பவர்களின் தேர்ச்சி குறைந்து, மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயில்பவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதாலும் தமிழகம் எதிர்ப்பதை போலவே, மஹாராஷ்டிராவும் நீட் தேர்வுக்கு எதிராக குரலை எழுப்பி வருகிறது.
இது போக, முந்தியெல்லாம் ப்ரஷ்சாக பன்னிரெண்டு முடித்தவர்கள் மருத்துவப்படிப்பில் சேருவது தான் அதிகமாய் இருக்கும். இந்த நீட் தேர்வினால் ‘ரீப்பீட்டர்ஸ்’ மருத்துவப்படிப்பில் சேருவது அதிகமாய் இருக்கிறது. அதாவது பன்னிரெண்டு முடித்து ஒரிரு வருடம் கழித்து தேர்வு எழுதுபவர்கள் அதிகம் தேர்ச்சி பெறுவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. 2016-17 ஆண்டுகளில் ரிப்பீட்டர்ஸ் தேர்ச்சி விகிதம் 12.47 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது அது 71.42 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.
மேலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் ஒருவர் அவரின் பயிற்சிக்காக மட்டும் 10 லட்சத்திற்கும் மேல் செலவழிப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. இதன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவம் எட்டாக்கனியாக போய் விடும்.
“ இந்த காரணத்திற்காகவே தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன “