சாக்ஸி தெலுங்கு திரைப்பட விருது விழாவில் 5 விருதுகளை அள்ளிய ‘Ala Vaikunthapurramuloo’!
Ala Vaikunthapurramulo Won 5 Awards In Sakshi Film Awards
அல்லு அர்ஜூன் நடித்து தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்த ‘Ala Vaikunthapurramuloo’ சாக்ஸி விருது விழாவில் ஐந்து விருதுகளை அள்ளி அசத்தியுள்ளது.
ட்ரை விக்ரம் ஸ்ரீனிவாஸ் அவர்களின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பூஜா ஹெட்ஜே மற்றும் பலர் நடித்து தெலுங்கில் வெளி வந்த ‘Ala Vaikunthapurramuloo’ படத்திற்கு, சாக்ஸி திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த படம் என்ற ஐந்து கேட்டகரியின் கீழ் ஐந்து விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
“ பாட்டு, படம், மேக்கிங், நடிப்பு, அதிரடி என்று எல்லாவற்றிலும் கலக்கி இருக்கும் இந்த படம் நிச்சயம் ஐந்து விருதுகளுக்கு தகுதியானதே “