தமிழகத்தில் இனி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
1970-இல் கலைஞர் கருணாநிதி அவர்கள் கொண்டு வந்த திட்டமான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் திட்டம் 51 வருடங்களுக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது.
’அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டத்தை தொடர்ந்து, முறையாக அர்ச்சகருக்கு பயிற்சி பெற்று படித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தி இருக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 58 பேருக்கும் கபாலீஸ்வரர் கோவில் திருமணமண்டபத்தில் வைத்து பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
“அர்ச்சகர் என்றாலே ஒரு சாதிப்பிரிவினருக்குரிய பணிஎன்பதை களைந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்திருக்கும் அறிவிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டு வருகிறது “