600 சீன பிராண்டுகள், 3000 வணிகர்களை அதிரடியாக நீக்கிய அமேசான்!
பரிசுகளைக் கொடுத்து பொய்யாக தரமதீப்பீடுகளை செய்ய வைத்து கஸ்டமர்களை ஏமாற்றி வந்த 600 சீன பிராண்டுகளையும், அந்த பிரான்டுகளுக்கு செல்லர்களாக செயல்பட்டு வந்த 3000 வணிகர்களையும் நீக்கி அதிரடி காண்பித்திருக்கிறது அமேசான் நிறுவனம்.
தொடர்ந்து தங்கள் பொருள்களின் அதீத விற்பனைக்கு ஆசைப்பட்டு, ஒரு சில நிறுவனங்கள் போலி ரிவ்யூவர்களை ஏற்பாடு செய்து, அந்த போலி ரிவ்யூவர்கள் மூலம் கொடுக்கப்படும் ரிவ்யூக்களுக்கு பரிசுகளையும் அள்ளிக்கொடுத்து வந்துள்ளன. இது சில நாட்களாகவே அமேசான் நிறுவனத்தால் நோட்டமிடப்பட்டு வந்தது. தற்போது அமேசானின் இந்த பாலிசி விதி மீறல்களுக்கு உட்பட்டஅந்த 600க்கும் மேற்பட்ட சீனப் பிராண்டுகளையும், அதை ஆமோதித்து வந்த 3000க்கும் மேற்பட்ட வணிகர்களின் அக்கவுண்டுகளையும் கண்டறிந்து அதிரடியாக நீக்கியுள்ளது அமேசான் நிறுவனம்.
இந்த நடவடிக்கைகள் அமேசான் நிறுவனத்துடன் இணைந்து வணிகம் புரிந்து வந்த பல்வேறு சீன நிறுவனங்களை ஆட்டம் காண வைத்துள்ளது. இன்னமும் மறைமுகமாக நடக்கும் பல்வேறு பாலிசி விதி மீறல்கள் அறியப்பட்டு அதற்கும் நடவடிக்கைகள் கடுமையான முறையில் எடுக்கப்படும் என்று அமேசான் நிறுவனம் எச்சரித்துள்ளது.
“ பெரும்பாலும் ஸ்டார்களை நம்பியே ஒரு பொருள்களை ஆன்லைனில் வாங்கும் கஸ்டமர்களின் நம்பிக்கையை சிதறடித்துள்ளது இந்த வணிகர்களின் செயல்பாடுகள். இனியாவது ஆன்லைன் பர்சேசர்கள் ஸ்டார்களை மட்டும் நம்பாமல், பொருள்களின் தரம் அறிந்து பொருள்களை வாங்கி கவனத்துடன் செயல்படவும் “