எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் கடைசி குரல் இணையத்தில் வெளியாகி உள்ளது!
Annaathe First Single Out From Now
ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடியுள்ள அவரின் கடைசி குரல் பாடலாக வெளியாகி உள்ளது.
சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தில் எஸ்.பி. பால சுப்பிரமணியம் அவர்கள் பாடியுள்ள பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
“ முன்னாடியெல்லாம் தலைவர் அவர்களின் திரைப்படத்தில் பெரும்பாலான என்ட்ரி பாடல்கள் எஸ்.பி.பி அவர்கள் குரலில் தான் இருக்கும். கடைசி குரலிலும் கூட தலைவர் அவர்களுக்கு ஒரு பாடல் கொடுத்துக் கொண்டு போயிருக்கிறார். நிச்சயம் ஹிட் அடிக்கும் “