வெளியானது அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர்!
Annaathe Motion Poster Released In Net
காலையில் தான் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி தற்போது வரை இணையத்தை கலக்கி வரும் நிலையில், அண்ணாத்த டீம் மோசன் போஸ்டர் என்று அடுத்து ஒரு அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் படக்குழுவினால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிடப்பட்டுள்ளது. காலையில் பர்ஸ்ட் லுக் மாலையில் மோஷன் போஸ்டர் என்று தலைவர் ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட் தான்.
” அன்று பார்த்த அதே கம்பீர குரல், சுட்டெரிக்கும் பார்வை, கையில் அருவா, ரைஸ் ஆகும் பைக், பறக்கும் கார் ஆஹா! ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே இந்த படத்தில் தலைவரின் கேரக்டர் ஒரு ராவான கேரக்டர் தான் போல, நிச்சயம் இந்த தீபாவளி அண்ணாத்தே தீபாவளி தான் “