தலைவர் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க இருக்கும் ‘ அண்ணாத்த ‘ டீம்!

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீட்டு தேதியே அறிவித்து தலைவர் ரசிகர்களை குசிப்படுத்தி இருக்கிறது அண்ணாத்த டீம்.

ரஜினி காந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என்று மிகப்பெரிய பட்டாளங்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தை இயக்குநர் சிவா அவர்கள் இயக்க சன்பிக்சர் கலாநிதிமாறன் அவர்கள் தயாரித்து வெளியிட் இருக்கிறார்கள். இப்படம் ஏற்கனவே தீபாவளிக்கு வெளி ஆகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது பர்ஸ்ட்லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகும் தேதியும் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் பர்ஸ்ட்லுக், நாளை அதாவது 10-09-2021 அன்று காலை 11:00 மணி அளவில் வெளியிடப்படும் என்றும் படத்தின் மோசன் போஸ்டர் மாலை 06:00 மணி அளவிலும் வெளியிடப்படும் என்றும் அண்ணாத்த படக்குழு அறிவித்ததிலிருந்து சமூக வலைதளதளங்கள் தலைவர் ரசிகர்களின் கைகளின் பிடியில் சிக்கி உள்ளன. வெறும் அறிவிப்பையே வைரலாக்கி இணையத்தை கலக்கி கொண்டு இருக்கின்றனர் தலைவர் ரசிகர்கள்.

” அதானே சிங்கிள் டரீட் என்றாலே தலைவரின் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது, இதில் வேறு டபுள் ட்ரீட் இன்னும் ஒரு வாரத்திற்கு ட்ரென்டிங்கில் தலைவர் தான் இருப்பார் “

About Author