வெளியானது அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக்!

Annathae FL Realeased In Net

Annathae FL Realeased In Net

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் படக்குழுவினரால் இன்று வெளியிடப்பட்டது.

சன்பிக்சர் கலாநிதிமாறன் அவர்களின் தயாரிப்பில் இயக்குநர் சிவா அவர்களில் இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன் தாரா, ஜாக்கி ஷெராப் என்று மிகப்பெரிய பட்டாளங்கள் இணையும் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட சிறிது நிமிடத்திலேயே இணையத்தில் வைரலாகி சமூக வலைதளங்களில் ட்ரென்ட் ஆகி கொண்டிருக்கிறது. இது தான் தலைவர் அவர்களின் மேஜிக் போல.

சிவாஜி, எம் ஜி ஆர்க்கு அப்புறம் தீவிர ரசிகர் பட்டாளத்தை தன்வசம் வைத்திருப்பவர், நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் என்றால் அது மிகையாகாது. இன்றளவும் ட்ரென்டில் யாராலும் அசைக்க முடியாத நபராகவே இருக்கிறார். ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா ஆபர் போல பர்ஸ்ட் லுக், மோசன் போஸ்டர் என்று ஒரே நாளில் இரண்டு அப்டேட்டுகளை அள்ளிக்கொடுக்கிறது அண்ணாத்த டீம்.

“ நீண்ட நாளுக்கு பிறகு ஒரு ராவான கேரக்டரை தலைவரிடம் இருந்து எதிர்பார்ப்பதாக ரசிகர்கள் பலர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர், பொறுத்திருந்து பார்க்கலாம் தலைவர் என்ன செய்திருக்கிறார் என்று! “

About Author