’அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Aranmanai 3 Releasing Date Announced
ராகவா லாரன்ஸ்சின் ’காஞ்சனா’ சீரிஸ் போல, தற்போது சுந்தர் சி-யும் ’அரண்மனை’ படத்தின் மூன்றாவது பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் முழுமையான வேலைகள் முடிந்திருக்கும் நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.
’அவ்னி சினிமேக்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், சுந்தர் சி, ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஜெர்மியா, யோகி பாபு, குஷ்பு மற்றும் பலர் நடிக்கும் அரண்மனை 3 படத்தின் தியரிட்டிக்கல் ரிலீஸ் உரிமையை பெற்றிருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜியாண்ட் மூவிஸ்’. இந்த நிலையில் படம் அக்டோபர் 14 அன்று உலகம் முழுக்க தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது படக்குழு.
“ படம் திரைக்கதை எப்படி இருந்தாலும் மக்களையும் குழந்தைகளையும் போய் சேரும் காஞ்சனா சீரிஸ் போல, அரண்மனை சீரிஸ்சும் மக்களிடையே வெல்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “