அட்லீ-ஷாருக்கான் இணையும் புதிய படத்தின் பெயர் வெளியீடு!
Atlee Shah Rukh Khan Film Titled
அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் புதிய படத்தின் பெயர் படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
’ ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான், நயன் தாரா மற்றும் பலர் நடித்து, ஹிந்தி மொழியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘லயன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொதுவாக அட்லீ படம் என்றாலே மசாலா, காதல், எமோசன்ஸ் என்று எல்லாம் ஒரு சேரக் கலந்த ஒரு படமாக இருக்கும். ஹிந்தி ரசிகர்களுக்கும் அட்லீ இதே பாணியை கடைப்பிடிப்பாரா இல்லை தன்னுடைய பாணியிலிருந்து விலகி வேறு ஒரு தளத்திற்கு செல்வாரா என்பதை படம் வெளிவந்த பிறகு தான் பார்க்க வேண்டும்.
” தமிழில் ராஜா ராணி, தெறி, பிகில் என்று ஹிட் அடித்த அட்லீ ஹிந்தியில் ஷாருக்கானுடனும் ஹிட் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “