ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம்-இன்று முதல் அமல்

ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கு இன்றிலிருந்து கூடுதல் கட்டணம், கடந்த ஜூன் மாதமே ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க RBI அனுமதி அளித்திருந்த நிலையில் இன்றிலிருந்து கூடுதல் கட்டணம் அதிகாரப்பூர்வமாக அமலாகிறது.

ஏற்கனவே பணப்பரிவர்த்தனைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதித்து வரும் பொதுத்துறை வங்கிகள், தற்போது ஏடிஎம் பணப்பரிவர்த்தனைக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் இனி தங்களது வங்கியை தவிர்த்து வேறு வங்கிகளில் ஏடிஎம்-யை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்தால் ரூபாய் 17 அவர்களின் வங்கிகணக்கிலிருந்து பிடிக்கப்படும். இதற்கு முன்னர் பிற வங்கி ஏடிஎம் பணப்பரிவர்த்தனைக்கான கட்டணம் ரூபாய் 15 ஆக இருந்தது தற்போது அது இரண்டு ரூபாய் கூடி ரூபாய் 17 ஆக உயர்ந்துள்ளது. எனினும் மூன்று முதல் ஐந்து தடவை பிற வங்கி ஏடிஎம்-யில் கார்டை பயன்படுத்தினால் கட்டணம் ஏதும் பிடிக்கப்பட மாட்டாது என்றும் அதற்கு மேல் உபயோகிக்கும் போதே இந்த கட்டணங்கள் பிடிக்கப்படும் என்றும் பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.

இதைப்பற்றி வங்கிகளின் சார்பில் விசாரித்த போது  ஆங்காங்கே இருக்கும் ஏடிஎம் பராமரிப்புச்செலவை ஈடுசெய்யும் வகையிலேயே இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுத்துறை வங்கிகள் தெரிவிக்கின்றன.

“ எனினும் கோடிகள் குவியும் வங்கிகள், மக்களிடம் பரிவர்த்தனை கட்டணம் என்னும் பெயரில் பணம் பறித்தால் மட்டுமே எங்களால் ஏடிஎம்-யை பராமரிக்க முடியும் என்று முறையிடுவது வேடிக்கையான ஒன்றே “

About Author