ஆகஸ்ட் இறுதியில் கொரோனோ மூன்றாம் அலை…?
உருமாறிய கொரோனோ ரகமான டெல்டா வைரஸ் மற்றும் டெல்டா பிளஸ் தற்போது வேகமாக இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளிலும் பரவி வருகின்ற நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை ஆகஸ்ட் இறுதியில் இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
சில நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மறுபடியும் உயர்ந்து வருகின்ற கொரோனோ தொற்று மாநில மத்திய அரசுகளிடேயே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் மற்றுமொரு பிரச்சனை என்னவென்றால் ஏற்கனவே கொரோனோ தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒரு சிலருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இதைப்பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்று நோயியல் பிரிவு தலைவர் சமீரான் கூறுகையில் பெருகி வரும் கொரோனோ மூன்றாவது அலையை உறுதி செய்துள்ளது. மேலும் மூன்றாவது அலை ஆகஸ்ட் இறுதியில் இருக்க கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
“ தனி மனித ஒழுக்கத்தோடு முகக்கவசம் அணியுங்கள், பொதுவெளியில் சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள், வெளியில் சென்று வந்தால் அடிக்கடி கைகால்களை சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள், இதுவே இந்த கொரோனோவுக்கு எதிராக தனிமனிதராய் நாம் எடுக்க முடிகின்ற போர்க்கவசம் “