பிக்பாஸ் 5 தமிழ் | மூன்றாம் நாள் | ரிவ்யூ | பிக்பாஸ்சை புரட்டியெடுக்கும் பிரியங்கா!
பிக்பாஸ் 5 தமிழின் மூன்றாம் நாளிற்கு உரிய முழுமையான ரிவ்யூவை இந்த தொகுப்பினில் பார்க்கலாம்.
காலை 8 மணி, ’மாஸ்டர்’ படத்தில் வரும் ‘வாத்தி கமிங் ஒத்தே’ என்ற ஹிட்டான பாட்டுடனும், ஹவுஸ்மேட்ஸ் அவர்களின் மரண குத்து டான்ஸ்சுடனும் பிக்பாஸ் ஹவுஸ் இனிதே விடிகிறது. இன்னிக்கும் முத ஆளா பிரியங்காவ தான் கண்ணுல காமிக்கிறாங்க. சின்ன பொன்னு அக்காவோட நைட்டிய காணும்னு சின்னபுள்ள தனமா பிக்பாஸ்கிட்ட பஞ்சாயத்து பேசிகிட்டு இருக்கு பிரியங்கா. பெருசு பெருசு என்ற பிக்பாஸ்சை அழைக்கும் ப்ரியங்காவின் கலாய்ப்புகளுக்கெல்லாம் என்றாவது ஒரு நாள் பெருசாக ஆப்பு வைக்க போகிறார் பிக்பாஸ்.
அதற்கப்புறம் மழையையும், அதுல ஒரு சில ஹவுஸ்மேட்ஸ் நனையுறதையும் காமிச்சிட்டு, மறுபடியும் அப்படியே வீட்டுக்குள்ள காமிக்கிறாங்க. அங்க ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் டைனிங் டேபிள்ல உட்காந்திருக்க, ராஜுவும் அபிஷேக்கும் இசை அமைக்க, சின்ன பொன்னு அக்கா பாடின அந்த ‘கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வர்றியா வர்றியா’ சாங் செம்ம. அதுவும் அக்கா வாய்ஸ்ல ஹவுஸ்மேட்ஸ்ல செம்மயா என்ஜாய் பண்ணி கேட்குறாங்க!
அதுக்கப்புறம் மறுபடியும் ‘ஒரு கதை சொல்லட்டும்மா?’ டாஸ்க் தொடங்குகிறது. இமான் அண்ணாச்சியை மூன்றாவதாக கதை சொல்ல அழைக்கிறார் பிக்பாஸ். தனக்கே உரிய பாணியில் தன்னுடைய உருக்கமான கதையைக்கூட காமெடியாக, ஹவுஸ்சில் உள்ள அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு, நேர்த்தியாக சொல்லி முடிக்கிறார் நம்ம இமான் அண்ணாச்சி. ராஜு, நேற்று இப்படி ஒரு கதை சொல்லும் விதத்தை தான் எதிர்பார்த்து இருப்பார் போல, முதல் ஆளாக எந்திரித்து போய் அண்ணாச்சிக்கு ஹார்ட் விடுகிறார்.
ஒட்டு மொத்தமாக அண்ணாச்சி, அவரின் கதைக்கு 7 லைக்குகளும், 5 ஹார்ட்டுகளும், 5 டிஸ்லைக்குகளும் ஹவுஸ்மேட்டுகளிடம் இருந்து வாங்குகிறார். நமக்கு தெரிந்து நேற்று இசைவாணியும், சின்ன பொன்னு அக்காவும் சொன்ன கதையை விட, அண்ணாச்சியே தன் கதையை மிகவும் நேர்த்தியாகவும், தட்டு தடுமாறாமலும், காமெடியாகவும், பளிச்சென்று சொன்னார். ஆனாலும் 5 ஹவுஸ்மேட்ஸ் (அபினய்,நமீதா,நடியா,சிபி,வருண்) அவருக்கு டிஸ்லைக் கொடுத்தனர். அதுக்காக அவர்கள் சொன்ன காரணமும், பெரிதாக அர்த்தமுள்ளதாக இல்லை. இதனால் உண்டான சலசலப்பைக் கூட அண்ணாச்சி சிறிதும் முகம் சுளிக்காமல், காமெடியாக முடித்து வைத்தது பாராட்டுதலுக்குரியது.
அதற்கப்புறம் வெளியில் ரிவ்யூ செய்தது பத்தாது என்று பிக்பாஸ் ஹவுஸ்சுக்குள்ளும் சென்று அபிஷேக் ராஜா, ஹவுஸ்மேட் ஒவ்வொருவருக்கும் ரிவ்யூ சொல்ல ஆரம்பித்து விட்டார். அது ரிவியூவா இல்ல, அவர் வைக்கிற ஐஸ்சானு தெரில. எதுனாலும் இன்னும் கொஞ்ச நாள் போனா அதுவாவே தெரிஞ்சிடும். நெற்றியில் பட்டை, பேசும் பேச்சினில் வெகுளித்தனம் என்று தாமரைச் செல்வி, அவரது பாணியில் நமது கிராமப்புற அம்மாக்களை, கொண்டு வந்து நம் கண்முன் நிறுத்துகிறார்.
பின்னர் மீண்டும் டாஸ்க் ஆரம்பிக்கிறது. சுருதி அவர்கள் நான்காவதாக பேச அழைக்கப்படுகிறார். அவரும் அவரின் கடினமான வாழ்வியலைப் பற்றி கண்ணீருடன் கதையாக விளக்குறார். வயதான அப்பா, அம்மா அவருக்கு இரண்டாம் தாரம், குடிசை, ஒரு வேளை உணவுக்கு கஷ்டம், சிறு வயதிலேயே தந்தை இழப்பு, அந்த கஷ்டத்தோடு படிப்பு என்று அவர், அவரின் கதையை கண்ணீருடன் சொல்ல சொல்ல, நம் மனதும் தன்னால் உருகி, தானாகவே நம்மை அழ வைத்து விடுகிறது. ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் அதே நம் நிலை தான். இறுதியில் அவரின் கதைக்கு ஹவுஸ் மேட்டிடம் இருந்து ஒட்டு மொத்தமாக 8 லைக்ஸ், 9 ஹார்ட்டுகள் வாங்குகிறார். யாரும் டிஸ்லைக்ஸ் கொடுக்கவில்லை.
அங்கங்கு காமெடிகளில் ஸ்கோர் செய்து ஹவுஸ்மேட்களையும் கலகலக்க வைக்கிறார் பிரியங்கா. அதே டிவியோடு ஒன்றி இருப்பதால் ஏனோ, மற்ற ஹவுஸ்மேட்களுக்கு பிக்பாஸ் பற்றி தெரிந்திருப்பதை விட அவர் அதிகமாகவே உணர்ந்திருக்கிறார். நாம் மேடைகளிலும் மற்ற நிகழ்ச்சிகளிலும் பார்க்கும் அதே கலகலப்புகளோடு ஹவுஸ்சின் உள்ளும் அப்படியே இருக்கிறார். இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு, பிக்பாஸ்சை செம்மையாக கலாய்த்து தள்ளுகிறார் பிரியங்கா.
’ப்ரியங்கா உங்க மைக்க சரியா மாட்டுங்க’ என்ற பிக்பாஸ்சின் குரல் வந்ததும் ஷாக் ஆகி ஒரு நிமிடம் உறைந்து போய் மைக்கை சரி செய்து விட்டு, ‘ஆஹ்ன் ஆஹ்ன் சரி ஒகே பெருசு’ என்று பதில் சொல்லி அடுத்த நிமிடம் அந்த பிக்பாஸ்சையே உறைய வைத்து விடுகிறார் பிரியங்கா. ’என்னைய வெளில அனுப்பிடாதீக, இங்க தான் ஏசி போட்டு குளு குளுன்னு இருக்கு, சாப்பாடு போடுறாய்ங்க’ என்ற வெகுளியான பேச்சால் வெகுவாய் கவர்கிறார் தாமரைச் செல்வி.
” ஹைலைட்ஸ்: ஆங்காங்கே சிரிப்பலைகள், அண்ணாச்சியின் கல கலப்பான கதை, சுருதியின் உருக்கம், பிரியங்கா வெர்சஸ் பிக்பாஸ் கலாய்ப்புகள், தாமரையின் வெகுளி என்று பிக்பாஸ் 5 மூன்றாம் நாள் ஒரு Fun Filled எபிசோடாகவே முடிந்திருக்கிறது “
பின் குறிப்பு: முக்கியமா இந்த எபிசோடுல இருந்து என்ன தெரியுதுன்னா, இனிமே சேனல் சார்பா போடுற எந்த புரொமோவயும் நம்பாதீக, அப்புறம் வருத்தப்படுவீக, அவ்ளோ தான்!