’பிக்பாஸ்’ கவின் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீடு!
Lift Trailer Released In Net
’பிக்பாஸ்’ மூலம் வெகுவான மக்களால் அறியப்பட்ட கவின் அவர்கள் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஹெப்சி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வினித் வரபிரசாத் அவர்களின் இயக்கத்தில், பிக்பாஸ் பிரபலம் ‘கவின்’, அம்ரிதா ஐயர் மற்றும் பலர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 1 அன்று ‘டிஸ்னி ஹாட் ஸ்டார்’ வலை தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ட்ரெயிலரும் தற்போது வெளியாகி உள்ளது.
“ நீண்ட போராட்டத்திற்கு பிறகு பெரிய திரையில், மற்றுமொரு படத்தில் களம் இறங்கி இருக்கும் கவின் அவர்களின் இப்படம் வெற்றி பெற இடம் பொருள் டீம் சார்பாக வாழ்த்துக்கள் “