இன்று பிரம்மாண்டமாய் துவங்க இருக்கிறது ‘பிக்பாஸ் 5 – தமிழ்’!
BigBoss Season 5 Tamil Starts From Today
கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 தமிழ் ஒளிபரப்பு இன்று முதல் துவங்க இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 5 தமிழ் ஒளிபரப்பு இன்று ஆறு மணி முதல் துவங்க இருப்பதாக விஜய் டிவி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு விஜய் டிவி மற்றும் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்று சனி (ம) ஞாயிறுகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிக்பாஸ் 5 தமிழில் கலந்து கொள்ள இருப்பவர்கள் என்று பல்வேறு தரப்பில் சொன்னவர்களின் வாயிலாக ஒரு சில போட்டியாளர்களை முடிவு செய்துள்ளோம். அந்த வகையில் அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, அக்ஷாரா ரெட்டி, சுஷன் ஜியார்ஜ், பிரியங்கா தேஷ்பாண்டே, ஷாலு ஷாமு, மில்லா, ரேனுகா பிரவீன், சச்சின் மணி, சந்தோஷ் பிரதாப், இமான் அண்ணாச்சி ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
“ எப்படியும் இன்று உறுதியாகி விடும் யார் யார் பங்கேற்பாளர்கள் என்று, மேலும் இன்னும் கொஞ்ச நாளுக்கு இணையதளவாதிகளுக்கு பெரிதாக ஒரு கன்டன்ட் சிக்கி இருக்கிறது, பார்க்கலாம் இந்த முறை யார் யார் வருகிறார்கள், யார் யார் தங்களை தாங்களாகவே தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்று “
About Author
Auto Amazon Links: No products found.