Bigg Boss Tamil 7 | Day 31 | Review | ‘அவனே ஒரு ஜோக்கர், அவனே ஒரு முட்டா பய, அவன்கிட்டலாம் சண்ட போட்டுட்டு இருக்க முடியுமா?’

Bigg Boss Tamil 7 Day 31 Review In Tamil Idamporul

Bigg Boss Tamil 7 Day 31 Review In Tamil Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், முப்பத்து ஒன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.

ஹைலைட்ஸ்: அக்‌ஷயா Hugs பிரதீப் – நிக்ஸன் And ஐஷு Conversation About பிரதீப் – ஹவுஸ்மேட்ஸ் About பிரதீப் – நிக்ஸன் ப்ரேக் அப் – பிக்பாஸ் டேலண்ட் ஷோ

Bigg Boss Tamil 7 Day 31 Akshaya Hugs Pradeep Idamporul
Bigg Boss Tamil 7 Day 31 Akshaya Hugs Pradeep Idamporul


கூல் சுரேஷ் உடனான விவாதத்தால் ரொம்ப உடைந்து இருந்த பிரதீப், அக்‌ஷயாவிடம் கேட்டு ஒரு Hug வாங்கிக் கொண்டார். ’என்ன ஏமாத்திட்டான் மச்சான், எனக்கு துரோகம் பண்ணிட்டான் மச்சான், அம்மா மேல சத்தியம் பண்ணி பொய் சொல்றான், அதுனால தான் மச்சான் கோபம், பேசுனதெல்லாம் தப்பு தான் மச்சான், ஆனா சாரியெல்லாம் கேட்க மாட்டேன் மச்சான், அதுக்காக என்ன இப்பவே போன்னு சொன்னாலும் போயிடுவேன் மச்சான்’ என பிரதீப் உருக்கமாக அக்‌ஷயாவிடம் கொட்டிய வார்த்தைகள் மூலம், அவர் வேண்டுமென்றே எதையும் மீன் பண்ணி சொல்லவில்லை என்பதை உணர முடிந்தது.


Bigg Boss Tamil 7 Day 31 Nixen Ayshu Conversation Idamporul
Bigg Boss Tamil 7 Day 31 Nixen Ayshu Conversation Idamporul



’அவன் தள்ளி விடுறான், நீ சும்மா இருக்க, அவன அண்ணான்னு கூப்பிட்டு சமாதானப்படுத்திட்டு உள்ள கூப்பிட்டு போற’ என ஐஷூ பிரதீப்பை சுட்டிக் காட்டி ஒரு சில வார்த்தைகளை விடுகிறார். ’ஹே அவனே ஜோக்கர்டி, அவனே ஒரு முட்டாள், அவன்கிட்ட போய்ட்டு என்ன சண்ட போட சொல்றியா’ என நிக்ஸனும் பிரதீப்பை கடுமையாக சாடினார்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், பிரதீப் திட்டுவதாக இருந்தாலும், ஒருவரை பாராட்டுவதாக இருந்தாலும் அவரிடமே நேரடியாக சென்று செய்து விடுவார். நிக்ஸன் நல்ல பையன் டா என்று சாதாரணமாக பேசிக் கொண்டு இருக்கும் போது கூட பலரிடம் பிரதீப் நிக்ஸன் குறித்த புரிதலை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் நிக்ஸன், இன்னொரு பக்கம் பிரதீப் குறித்து புறம் பேசிக் கொண்டு இருக்கிறார். அவர் மட்டும் அல்ல ஒட்டு மொத்த இல்லமும் பிரதீப்பை டார்கெட் செய்து பைத்தியம், சைக்கோ, வெளில போகட்டும் என புலம்பி தீர்த்துக் கொண்டு இருந்தனர்.

நிக்ஸன், ஐஷூ இடையேயான ரிலேசன்சிப் குறித்து இருவருக்குமே புரிதல் இல்லை, தொடர்ந்து நிக்ஸன், ஐஷூவை பாடா படுத்தவே ’உன்ன எனக்கு பிடிக்கல, நீ Fakeah இருக்க, இடியட் மாறி இருக்க’ என்ற வார்த்தைகளை கடுமையாக கூறி நிக்ஸனை மொத்தமாக துரத்தி விட்டார். நிக்ஸனும் சரி சாரி என்று கூறி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இனியாவது இந்த விஷயத்தை மொத்தமாக விட்டு விட்டு நிக்ஸன் கேமில் கான்சன்ட்ரேட் பண்ணலாம். செய்வாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Bigg Boss Tamil 7 Day 31 Pradeep And Cool Chance To Head Bigg Boss Talent Show Idamporul
Bigg Boss Tamil 7 Day 31 Pradeep And Cool Chance To Head Bigg Boss Talent Show Idamporul


பிரதீப், கூல் இருவருமே இல்லத்தில் சிறந்த எண்டர்டெயினர்கள் என்று சொல்லலாம், பிரச்சினைகளை எல்லாம் விட்டு விட்டு, அவர்களை இணைப்பதற்காக, பிக்பாஸ்சே ஒரு வாய்ப்பு கொடுத்தார். இருவரும் இணைந்து இரு அணிகளை தேர்ந்து எடுத்து பிக்பாஸ் டேலண்ட் ஷோ ஒன்றை நடத்துமாறு பிக்பாஸ் கேட்டுக் கொண்டார். ஆனால் கூல் சுரேஷ் மறுக்கவே, பிரதீப்பும் தன் மறுப்பை தெரிவித்து விட்டார். ஆனாலும் பிரதீப் விலகியதும் கூல் ஒரு அணிக்கு தலைமை எடுக்க ஒப்புக் கொண்டார்.

மாயா அணி, கூல் அணி என பிக்பாஸ் இல்லம் இரு அணிகளாக பிரிந்தது. ஸ்மால் பாஸ் இல்லத்தினர் தான் ஜட்ஜ்களாக செயல்பட வேண்டும் என்பது விதி. கூல் அணியில் நிக்ஸன், மணி, ரவீனா, ஐஷூ, விஷ்ணு இடம் பெற்றனர். மாயா அணியில் ஜோவிகா, பூர்ணிமா, அக்‌ஷயா, விக்ரம், பிரதீப் உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.

Bigg Boss Tamil 7 Day 31 Pradeep Story In Bigg Boss Talent Show Idamporul
Bigg Boss Tamil 7 Day 31 Pradeep Story In Bigg Boss Talent Show Idamporul


பிரதீப் ஸ்டோரியில் இருந்து ஆரம்பித்தது டேலண்ட் ஷோ, அவர் ஏதோ அனிமேசன் சீரிஸ்காக எழுதிய ஒரு கதையை சொல்லிக் கொண்டு இருக்கும் போதே தினேஷ் பஸ்சரை அடித்து, பிரதீப்பை வெளியேற்றினார். காரணம் கேட்டால் அவருடைய கதை நன்றாக தான் இருந்தது, அவருடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டே பஸ்சரை அழுத்தினேன் என்று கூறினார். இன்னொரு பக்கம் மணியும் டான்ஸ்சும் அருமையாகவே இருந்தது.

Bigg Boss Tamil 7 Day 31 Raveena And Ayshu Performance In Bigg Boss Talent Show Idamporul
Bigg Boss Tamil 7 Day 31 Raveena And Ayshu Performance In Bigg Boss Talent Show Idamporul


ரவீனா மற்றும் ஐஷூவின் நடனமும், அதன் மூலம் அவர்கள் கூறிய கருத்தும் அருமையாக இருந்தது. மாயாவின் ரிதம் ஷோவும் அவர் பாடிய பாடலும் செம்மையாக இருந்தது. நிக்ஸனின் Rap-பும் சூப்பராகவே இருந்தது. ஓவர் ஆலாக டேலண்ட் ஷோவில் அனைவருமே தங்களது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினர்.

Bigg Boss Tamil 7 Day 31 Bigg Boss Talent Show Controversies Idamporul
Bigg Boss Tamil 7 Day 31 Bigg Boss Talent Show Controversies Idamporul


என்னவோ தெரியவில்லை, ஆரம்பம் முதலே, கானா பாலாவிற்கும் கூல் சுரேஷ்சிற்கும் இடையே ஒரு கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. கானா பாலா ஒரு பக்கம் ‘அவர் காக்கா வலிப்பு வந்த மாறி ஆடிட்டு இருக்காரு, அவரு இல்லாம இருந்து இருந்தா நிக்ஸன் பாட்டு இன்னும் வெறியா இருந்து இருக்கும்’ என கூற, இதனால் காண்டு ஆன கூல் சுரேஷ், ‘எல்லாம் வயித்தெரிச்சல், நான் ஏதுமே பண்ணாம கூட எனக்கு இவ்ளோ ரசிகர்கள் இருக்காங்க, அண்ணனுக்கு ஏதும் இல்லனு வருத்தம்’ என கடுமையாக வார்த்தைகளை வெளிப்படுத்தினார்.

Bigg Boss Tamil 7 Day 31 Ayshu Got Star For Bigg Boss Talent Show Performance Idamporul
Bigg Boss Tamil 7 Day 31 Ayshu Got Star For Bigg Boss Talent Show Performance Idamporul


இறுதியாக மாயா அணியும், கூல் அணியும் சரி சமமான பாயிண்ட்களை பிக்பாஸ் டேலண்ட் ஷோவில் பெற்றதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுமே வெற்றி பெற்றதாக ஸ்மால் பாஸ் இல்லத்தினர் அறிவித்தனர். ‘No Means No’ கருத்து நடனத்தில் சிறப்பாக நடனமாடிய ஐஷூவிற்கு கோல்டு ஸ்டார் வழங்கப்பட்டது.

“ கூல் மற்றும் பிரதீப் இடையே நீடிக்கும் பிரச்சினைகள், ஐஷூவை விடாது துரத்தும் நிக்ஸன், புதியதாக முளைத்து இருக்கும் கானா பாலா மற்றும் கூல் இடையிலான பிரச்சினை என எபிசோடு பிரச்சினைகளால் நிறைந்து இருக்கிறது. இன்று என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !

About Author