Bigg Boss Tamil 7 | Day 33 | Review | ‘விதிகளை மீறிய கேப்டன், கண்டித்து அனுப்பிய பிக்பாஸ்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், முப்பத்து மூன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: மார்னிங் ஆக்டிவிட்டி – Shopping Repayment Task, Mace Table Task – Nomination For Jailing – கேப்டன்சி டாஸ்க் – Ayshu, Vichu, Jovika Conversation – VJ Archana Problems – Warning To Poornima
மார்னிங் ஆக்டிவிட்டி டாஸ்க்காக, ஒவ்வொருத்தரும் இரண்டு பஞ்ச் டையலாக்குகளை இரு போட்டியாளர்களுக்கு டெடிகேட் செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. அந்த வகையில் பெரும்பாலான நெகட்டிவ் டையலாக்குகள் பிரதீப்பை சுற்றி வந்தது. தினேஷ்சும், அர்ச்சனாவும் மட்டும் பிரதீப்பிற்கு பாசிட்டிவ் பஞ்ச் டையலாக்குகளை கூறினர். தினேஷ், ‘என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நானா செதுக்குனதுடா’ என்ற பஞ்ச் டையலாக்கை பிரதீப்பிற்கு டெடிகேட் செய்தார். ஒரு சில தவறான முடிவுகள் எடுத்து இருந்தாலும் கூட பிரதீப் அவரது முடிவின் படியே இத்துனை நாட்களும் இந்த இல்லத்திற்குள் இருந்திருக்கிறார் என தினேஷ் கூறியது ஈர்த்தது.
அடுத்தகட்டமாக ஷாப்பிங் ரீ பேமெண்ட் டாஸ்க், மூன்று பேர், மூன்று மேஸ் டேபிள்கள், அதன் மேல் ஒரு ஹேண்டில், ஸ்டார்ட் டு எண்ட் வரை அந்த ஹேண்டிலை நகர்த்தி செல்ல வேண்டும். ஒருவர் விளையாடி முடித்த பின்னர் இன்னொருவர் தொடங்க வேண்டும். மொத்தமே இரண்டு நிமிடங்கள் தான். இரண்டு நிமிடங்களுக்குள் மூன்று மேஸ் டேபிள்களிலும் டாஸ்க் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது ரூல். ஆனால் விஷ்ணு முடிக்கும் போதே நேரம் முடிவடைந்து விட்டது. டாஸ்க்கிற்கு பனிஷ்மெண்டாக ஒருவரை தேர்ந்தெடுத்து பிக்பாஸ் இல்லத்தார்கள் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும்.
பெரும்பாலாவோர் போன வாரத்தை விட, இந்த வாரம் இவரின் ஆக்டிவிட்டி கம்மியாக இருப்பதாக அக்ஷயாவை கூறினர். பிரதீப்பின் பெயர் ஒரு சிலரிடம் இருந்தே வந்தது. ‘அப்ப என்ன எல்லாரும் என்ன மன்னிச்சிட்டீங்களா, என் பெயர யாருமே சொல்லல’ என பிரதீப் கேட்க, உனக்கு இத விட பெரிய தண்டனை இருக்குன்னு விஷ்ணு ஷார்ட்டாக முடித்து விட்டார். கமல் சார் எபிசோடில் ஒட்டு மொத்தமாக பிரதீப் அவர்களை வச்சு செய்வது தான் மற்ற போட்டியாளர்களின் எண்ணம் போல. அதற்காக திட்டமும் தீட்டிக் கொண்டு இருந்தார்கள். இறுதியாக அதிக ஓட்டுக்களை பெற்ற அக்ஷயா ஜெயிலுக்குள் தள்ளப்பட்டார்.
அடுத்த கட்டமாக கேப்டன்சி நாமினேசன், பிக்பாஸ் இல்லத்தில் இந்த வாரம் முழுக்க சிறப்பாக செயல்பட்டதாக மாயாவும், கூல் சுரேஷ்சும், ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டதாக விசித்ராவும் கேப்டன்சி டாஸ்க்குக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். கார்டன் ஏரியாவில் ஒற்றை காலில் சரிவாக யார் அதிக நேரம் நிற்கிறார்களோ அவர்களே கேப்டன். அந்த வகையில் விசித்ரா சிறிது நேரத்திலேயே அவுட் ஆகி வெளியேற, கூல் சுரேஷ் கொஞ்சம் தாக்கு பிடித்தார். ஒரு கட்டத்தில் அவரும் சரிந்து விட, மாயா அடுத்த வாரத்திற்கான கேப்டனாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
கேப்டன்சி டாஸ்க்கிற்காக ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து விசித்ரா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது முதன் முதலில் கை தட்டியவர் பிரதீப், ஆனால் அதையும் ஒரு டாப்பிக்காக கொண்டு வந்தார் ஜோவிகா. ‘நீங்க கேப்டன் ஆகினா, அவன் கன்ட்ரோல்ல உங்கள வச்சிப்பான் அதுக்கு தான் அந்த கைதட்டல்’ என ஜோவிகாவும் ஐஷூவும் ஒருமையில் பிரதீப்பை பேச, நீங்க என்ன மேனுபுலேட் பண்ணனும்னு நினைக்காதீங்க விடுங்க, என அந்த டாபிக்கை விசித்ரா தவிர்த்தது ரசிக்க வைத்தது. பிரதீப் உண்மையில் மனதார விசித்ராவிற்கு கைதட்டல்களை பாராட்டுகளாக கொடுத்தது போல இருந்தது. நிச்சயம் அதை விசித்ரா புரிந்து கொள்வார். அவருக்கு அது புரியும்.
’நாங்க அப்ப தான் வந்தோம், பிக்பாஸ் வீட்ட கூட சுத்தமா சுத்தி பாக்கல, ஏதாச்சு குறைகள் இருக்கும் பட்சத்துல தான் ஸ்மால் பாஸ் இல்லத்துக்கு, கேப்டன் எங்கள அனுப்பி இருக்கனும், ஆனா எங்கள வந்த உடனே அனுப்பிட்டாங்க, எல்லா வேலையும் இங்க திருப்தியா தான் செய்யுறோம், ஆனால் நாங்க என்ன தப்பு செஞ்சு இங்க வந்தோம்ங்கிற கேள்வி எங்களுக்குள்ள மனசுக்குள்ள ஒடிட்டே இருக்கு’ என அர்ச்சனா விளக்கிய ஒவ்வொரு பாயிண்ட்களுமே சரியானது தான். அவ்வப்போது ரொம்ப எமோசனல் ஆகி விடுகிறார்.
ஒரு கட்டத்தில் பூர்ணிமா அவரை அரவணைத்து, ’சரி இப்ப நீங்க சுத்தி தானே பாக்கனும், என் கூட வாங்க’ என விதிகளை மீறி ஸ்மால்பாஸ் இல்லத்தில் இருந்து அர்ச்சனாவை வெளியேற்றி, பிக்பாஸ் இல்லத்தின் கார்டன் ஏரியாவில் சிறிது நேரம் அமர வைத்தார். விதிகளை மீறியதால் கேஸ் கட் செய்யப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பூர்ணிமா, அர்ச்சனா என இருவரும் கன்ஃபசன் ரூமிற்கு அழைக்கப்பட்டனர். அர்ச்சனாவிற்கு அட்வைஸ்களை பொழிந்து ஒரு வழியாக அவரை அவரது வழிக்கு கொண்டு வந்தார் பிக்பாஸ்.
’உங்க இஸ்டத்துக்கு விதிகள மீறுறீங்க, யார இம்ப்ரஸ் பண்ண இதெல்லாம் பண்றீங்க, ஒரு கேப்டன் என்பவர் அனைவரையும் விதிக்குள் வைத்துய் கட்டுக்கோப்பாக சூப்பர்வைஸ்சிங் பண்ண வேண்டும், அவரே விதிகளை மீறுவதற்கு வழி வகுக்க கூடாது’ என பூர்ணிமாவை பொறிந்து தள்ளினார். பாராட்டுகள் வரும் என நினைத்ததற்கு பல்பு தான் மிஞ்சியது.
” முதல் ஜெயில், மாயா அடுத்த வாரத்தின் கேப்டன், பூர்ணிமாவின் விதி மீறல்கள், கண்டித்த பிக்பாஸ் என்று எபிசோடு வழக்கம் போல ஏதாவது பிரச்சினைகளை சுமந்து கொண்டே முடிந்தது. தீர்ப்பின் நாள் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !