தல 61 | மீண்டும் இணையும் போனிகபூர்-வினோத்-அஜித் குமார் கூட்டணி!

Ajith Kumar Boney Kapoor Vinoth Joing Again In Thala 61

Ajith Kumar Boney Kapoor Vinoth Joing Again In Thala 61

’தல 61’ படத்திற்காக மீண்டும் போனி கபூர், ஹெச்.வினோத் இணைவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன.

’வலிமை’ படத்திற்கு பிறகு அஜித் குமார் நடிக்கும் பெயரிடப்படாத ‘தல 61’ படத்திற்கு, மீண்டும் போனி கபூரே தயாரிப்பாளராகவும், ஹெச். வினோத் அவர்களே மீண்டும் அந்த படத்தை இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்து மூன்று படங்களில் அஜித் குமார் அவர்களின் படத்தில் இணைகிறார் ஹெச்.வினோத்.

“ இதற்கு முன் இயக்குநர் சிவா அவர்களுக்கு கிடைத்த அதே வாய்ப்பு, மீண்டும் ஹெச்.வினோத் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. வாய்ப்பினை பயன்படுத்துக் கொள்வார் என்று பெரிதும் நம்புகின்றனர் தல ரசிகர்கள் “

About Author