மீடியாக்களாலும் சமூக வலைதளங்களாலும் ஒரு நாட்டின் தலைமையை தீர்மானிக்க முடியுமா?
மீடியாக்களாலும் சமூக வலைதளங்களாலும் ஒரு நாட்டின் தலைமையை தீர்மானிக்க முடியுமா என்றால் ஆம் என்றே சொல்லலாம்.
உதாரணத்திற்கு அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் அங்கிருக்கும் பெரிய தலைமைகள் என்பது நான்கைந்து பேர் என்று வைத்துக் கொண்டால், அதில் இருக்கும் ஒரு பெரிய தலைமை மற்ற மூவர்களின் வீக்னஸ்களை, பெர்சனல் விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு அதனை முக்கிய மீடியாக்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரல் ஆக்கி விட்டு விட்டு, தன்னை அந்த மூவர்களிலும் மாண்பு மிக்கவராக காமித்துக் கொள்வது என்பது வழக்கமாகி இருக்கிறது.
இந்தியாவை எடுத்துக் கொள்வோம், இங்கு விளம்பரங்களும், சமூக வலைதளங்களும் ஒரு பொய்யையும், உண்மையையும் வேகமாக எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனை பெரிய பெரிய தலைமைகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தனக்கு எதிரானவர்களை ஜோக்கர்களாக சித்தரிப்பது, வீடியோக்களை மார்பிங் செய்து அதை வைரல் ஆக்குவது, ஏதோ பிரம்மாண்டங்களை உருவாக்கியது போல சித்தரித்து தன்னை மிகைப்படுத்திக் கொள்வது போன்றவைகள் எல்லாம் இங்கு சாதாரணமாக நிகழ்கிறது.
உதாரணத்திற்கு ஒரு வாக்கெடுப்பு நடக்கிறது என்றால் எலக்சனுக்கு முன்னதான கருத்துக் கணிப்புகளை மிகப்பெரிய தலைமைகள் தங்களுக்கு சாதகமாக மீடியாக்களிலும், சமூக வலைதளங்களிலும் உருவாக்கி, அதை மக்களிடையே வைரலும் ஆக்கி மக்களின் மனநிலையை முதலில் மாற்றுகின்றனர். பின்னர் ‘தோக்குறவங்களுக்கு ஏன் ஓட்டு போடனும்’ என்றதொரு கருத்தை மக்களிடையே கொண்டு போய் சேர்ப்பதால், அந்த கருத்துக்கணிப்புகள் அந்த பெரிய தலைமைகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
” இதன் காரணமாகவே கார்பரேட் நிறுவனங்களும் சரி, பெரும் பெரும் அரசியல் கட்சிகளும் சரி, ஒரு பெரும் தொகையை விளம்பரங்களுக்காகவும் சமூக வலைதளங்களுக்காகவும், தொழில்நுட்ப பிரிவுகளுக்காகவும் ஒதுக்குகின்றனர், ஒரு விளம்பரம் ஒரு நாட்டின் தலைமையையே மாற்றும் என்பதில் எந்த ஐயமும் இல்லை, கோடிகள் இருந்தால் எதையும் எப்படியும் சித்தரிக்கலாம், எதையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம் “