மீண்டும் தலை தூக்கும் காவேரி பிரச்சினை, கர்நாடாகாவில் முழு அடைப்பு போராட்டம்!
Cauvery Issue Full Blockade In Karanataka Fact Here Idamporul
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை எதிர்த்து கர்நாடாகாவில் முழு அடைப்பு போராட்டம் அரங்கேறி வருகிறது.
காவேரி நீர் மேலாண்மை வாரியத்தின் விதிகளின் படி தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, கர்நாடாகாவில் முழுஅடைப்பு போராட்டம் அரங்கேறி வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
“ முழுஅடைப்பால் இயல்பு வாழ்க்கை முடங்கி கிடக்கிறது, தமிழகத்தில் இருந்து பணிக்காக பெங்களுரு செல்லும் பணியாளர்களும், பணிக்கு செல்ல முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இதனால் இரு மாநில எல்லைகளிடையே பதற்றம் அதிகரித்து வருகிறது “