இந்திய எல்லையில் கூடாரம் போட்டு அமர்ந்து இந்தியாவை சீண்டும் சீன ராணுவம்!
சில நாட்களுக்கு முன்பு தான் பேச்சுவார்த்தை முடிந்து, சீனாவும் இந்தியாவும் தனது ராணுவங்களை எல்லைப் பகுதியில் இருந்து திரும்ப பெற்ற நிலையில், மீண்டும் இந்திய எல்லைப் பகுதியில் கூடாரம் போட்டு இருந்து கொண்டு இந்தியாவை சீண்ட ஆரம்பிக்கிறது சீன ராணுவம்.
இந்திய உளவுத்துறை கொடுத்த தகவலின் படி சீன ராணுவம், இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதிகளிடையே கூடாரம் அமைத்து பிரிவுகள் பிரிவுகளாய் தங்கி உள்ளதாகவும், S-400 போன்ற பறக்கும் விமானங்களை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் நவீன ரக ஆயுதங்களை எல்லையில் நிறுத்தி, எல்லையில் மீண்டும் பதற்றத்தை சீனா தூண்டுவதாக கூறி வருகிறது.
தற்போது அமெரிக்காவிற்கு சென்ற பிரதமர் மோடி, சீன-இந்தியா எல்லை பிரச்சினைகள் குறித்து அமெரிக்காவிடம் விவாதித்ததாலேனோ, சீனா கோபம் கொண்டிருக்கும் போல. சீனாவிற்கு பரம எதிரியாக விளங்கும் அமெரிக்காவிடம் இந்தியா கூட்டு வைப்பதும் சீனாவின் கோபத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கும். அதன் காரணமாகவே தொடர்ந்து எல்லைகளில் இந்திய ரானுவத்தை சீண்டி வருகிறது சீன ராணுவம்.
“ இதற்கு முன்னர் நடந்த ஆயுதமில்லாமல், கற்கள், கம்புகள், வைத்து சீன ராணுவம், இந்திய ராணுவ வீரர்களை தாக்கியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. ஒன்று இந்தியா இறங்கி அடிக்க வேண்டும். இல்லையேல் உலக மன்றத்தில் முறையிட்டு எல்லை பிரச்சினைக்கு சரியான தீர்வு காண வேண்டும். இரண்டுக்கும் நடுவில் நின்று வீரவசனம் மட்டும் பேசிக் கொண்டு இருந்தால். இன்னும் நம் உயிரைக் குடிக்க தான் செய்வார்கள் அந்த சீன அரக்கர்கள் “