முந்தைய அரசின் கூட்டுறவுத்துறைக்கும் வருகிறதா வெள்ளை அறிக்கை?
முந்தைய ஆட்சியில் கூட்டுறவுத்துறையிலும் மிகப்பெரும் மோசடி நடந்திருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிக்கை விடுத்துள்ளார்.
கவரிங் நகைகளுக்கு கடன், 20 ஆயிரம் வழங்க வேண்டிய நிலத்துக்கு 80 ஆயிரம் கடன், விவசாயமே செய்யாதவருக்கு 3 லட்சம் கடன் என்று கூட்டுறவுத்துறையில் முந்தைய ஆட்சியில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டபேரவையில், 5 சவரனுக்கு உட்பட்ட நகைகளை வைத்து கூட்டுறவு வங்கியில் கடன்பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார். அதற்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் இந்நிலையில் கூட்டுறவு துறையில் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரும் மோசடிகள் அம்பலமாகி வருகின்றன.
இந்த மோசடிகள் குறித்து முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்டு, முந்தைய ஆட்சியில் நடைபெற்ற மோசடிகள் அனைத்தும் அம்பலப்படுத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி உறுதியளித்துள்ளார். மேலும் அரசு அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் லிஸ்ட் வெகு விரைவில் தயார் செய்யப்பட்டு, உரியவர்களுக்கு இத்திட்டம் போய் சேரும் வகையில் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
“ மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்படும் கடன்களில் இவ்வளவு முறைகேடா? எந்தெந்த அரசியல் பிரமுகர்களின் தலையீடு இதில் இருக்கிறது என்ற கேள்விகளை பலரும் சமூக வலை தளங்களில் முன்வைக்கின்றனர் “