கொரோனோ மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் பெறும் – தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்
நேற்றைய தினம் வரை இந்தியாவில் புதிய தொற்றின் விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. மீட்பு விகிதமும் இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் தான் மூன்றாவது அலையின் பயத்தை கொடுத்திருக்கிறது தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் பிரதமர் அலுவலகத்தில் கொடுத்திருக்கும் அறிக்கை.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மூன்றாவது அலை குறித்த அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில் கொரோனோ மூன்றாவது அலை இந்தியாவில் வரும் அக்டோபரில் உச்சம் பெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது நிலவி வரும் சூழலை மட்டும் கருத்தில் கொண்டு இந்த பேரிடர் காலத்தில் சுதந்திரம் தேட வேண்டாம் என்று மக்களையும் எச்சரித்துள்ளது.
டெல்டா பிளஸ் வைரஸ் வீரியம் எடுக்கும் சூழல் ஏற்பட்டால் அது தொற்று எண்ணிக்கையில் புதிய உச்சத்தை ஏற்படுத்தும். டெல்டா வகை கொரோனோ வைரஸ்சை விட அது ஆயிரம் மடங்கு வேகமாகவும் பரவக்கூடிய தன்மை உடையது. மேலும் வேகமாக ஒருவரின் உடலில் பரவி நோய் எதிர்பாற்றலை வெகு விரைவாக தாக்கும் வல்லமை பெற்றது. தற்போது நிலவி வரும் மிதமான சூழலை பயன்படுத்திக்கொண்டு இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பினால் இது வரை இல்லாத அளவிற்கு பெரும் பாதிப்பை நாடு சந்திக்க நேரிடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
“ நாம் தான் இந்த நாடு, நம்மை நாம் பாதுகாத்துக்கொண்டால் இந்த நாடும் பாதுகாப்பாகவே இருக்கும், நம்மை முதலில் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வோம் முகக்கவசம் அணிவோம் தனிமனித இடைவெளிகளை முறையாக கடைப்பிடிப்போம் “