கொரோனோ மூன்றாவது அலையை இந்தியாவில் டிசம்பருக்குள் எதிர்பார்க்கலாம் – மருத்துவ வல்லுநர்கள்!
Corono Third Wave In India Will Be Start In Between October To November
இந்தியாவில் மூன்றாவது அலையை அக்டோபர் முதல் டிசம்பர் இந்த காலக்கட்டத்திற்குள் எதிர்பார்க்கலாம் என்று இந்திய மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசத்தில் மூன்றாவது அலையை மக்கள் நெருங்கும் கட்டத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இனி வரும் அக்டோபர் முதல் டிசம்பர் காலக்கட்டம் இந்த மூன்றாவது அலையை உறுதி செய்யக்கூடும் எனவும் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள், தடுப்பூசி போட்டவர்கள் என்று அனைவரையும் தாக்கும் வல்லமை பெற்றதாக இந்த மூன்றாவது அலை இருக்க கூடும் என்றும் தடுப்பூசி தான் போட்டு விட்டோமே என்ற மெத்தனத்தில் யாரும் இருந்து விட வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர்.
“ இனி வரும் பண்டிகைகள், கூட்டமாய் கூடும் விழாக்கள் இதையெல்லாம் மக்கள் தவிர்ப்பது, மற்றும் மீண்டும் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கையாள்வது, ஆகியன மட்டுமே இந்த தேசத்தில் மூன்றாவது அலையின் பாதிப்பை பெரிதாய் குறைக்கும் ஆகவே பொறுப்புடன் செயல்படுங்கள் என்று அரசு சார்பில் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் “