இந்தியாவில் வெகுவாக குறைந்து வரும் கொரோனோ தொற்று – இந்திய மருத்துவ கவுன்சில்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,735 பேருக்கு புதியதாக தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 385 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 4,34,784-ஆக உயர்ந்துள்ளது.
வெகு நாட்களுக்கு பிறகு முப்பதாயிரத்திற்கும் கீழ் குறைந்திருக்கிறது இந்தியாவில் கொரோனோ தொற்று. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 57.62 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 100 பேருக்கு 43.24 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் அதே வேளையில் இந்தியாவில் மீட்பு விகிதம் அதிகபட்சமாக உயர்ந்தும் வருகிறது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் 44,103 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
உலகளாவிய அளவில் ஒரு நாளில் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்கள் 4,26,307 ஆக உள்ளனர். மேலும் 7,154 பேருக்கு தொற்றுக்கு பலியாகியும் உள்ளனர். வெகுவாக மீட்பு விகிதம் இந்தியாவில் உயர்ந்து வருவது ஒரு நேர்மறையான போக்கு தான். இனி வரிசையாக வரும் பண்டிகைகளில் கவனமாக இருப்பது மட்டுமே இந்தியாவிற்கு முக்கியமான கட்டமாக இருக்கும். இரண்டாம் அலை இந்தியா முழுக்க பரவி விரிந்ததற்கு காரணமே பண்டிகைகளில் மக்கள் ஒன்றாக கூடியது தான்.
“ இத்தோடு இந்த அலைகள் ஓய வேண்டும் எனில் இந்த ஒரு வருடம் மட்டும் பண்டிகைகளை தவிர்த்திடுங்கள். முடிந்தால் வீட்டிலேயே சிறப்பாக கொண்டாடுங்கள் “