இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,667 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இந்தியாவில் 21,667 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் தொற்றுக்கு 183 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை ஆனது இந்தியாவில் 4,49,029 ஆக உயர்ந்திருக்கிறது.
இது போக நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 27,038 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீட்பு விகிதமும் இந்தியாவில் பெரிய அளவில் உயர்ந்து இருக்கிறது. தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் தேசத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 90.79 கோடி என்ற இமாலய இலக்கை அடைந்து இருக்கிறது.
ஒட்டு மொத்த தேசத்தின் புதிய தொற்றில் கேரளா மட்டுமே 12,297 புதிய தொற்றினை கொண்டுள்ளது. ஆனாலும் கேரளாவில் இறப்பு விகிதம் என்பது 0.54 சதவிகிதம் என்ற குறைந்த நிலையிலேயே இருப்பதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்து வருகின்றது.
“ தடுப்பூசி உபயோகம் அதிகரிக்கின்ற பொழுது, இறப்பு விகிதம் குறைவதை கண்கொண்டு உணர முடிகிறது. தடுப்பூசி உங்களை நோயின் மீளா தன்மையிலிருந்து காக்கும் என்பதே இதன் அர்த்தம். ஆதலால் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் “