210 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் பதிவாகியிருக்கிறது குறைவான புதிய கொரொனோ தொற்று!
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,762 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனோ தொற்றிற்கு 254 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தேசத்தில் 4,49,283 ஆக உயர்ந்து இருக்கிறது.
கடந்த 210 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் புதிய கொரோனோ தொற்று குறைவாக பதிவாகி உள்ளது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 29,322 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 91 கோடியை எட்டி இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 68 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர்.
” மூன்றாவது அலை குறித்து தற்போது வந்துள்ள அறிக்கையின் படி அது டிசம்பருக்குள் தேசத்தை தாக்க கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆதலால் தற்போது உள்ள சூழலை மட்டும் கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டுகளை தளர்த்தி சுதந்திரம் தேடிட வேண்டாம் என்று எச்சரித்து உள்ளனர் “