கொரோனோ | நேற்றைய தினத்தை விட இந்தியாவில் அதிகரித்து இருக்கிறது புதிய தொற்று!
Corono Updates In India 06 10 2021
இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 19,380 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய தினத்தை விட சற்றே அதிகம். இது போக நேற்று மட்டும் 285 பேர் தொற்றிற்கு இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,49,568 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்று ஒரே நாளில் தேசத்தில் 25,089 பேர் கொரோனோ தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 92 கோடி என்ற இமாலய இலக்கை தொட்டு இருக்கிறது. சீக்கிரமே தடுப்பூசி உபயோகம் 100 கோடியை அடைந்து விடும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
“ 133 கோடி மக்கள் தொகை உள்ள ஒரு நாட்டில், கொரோனோ தடுப்பு செயல்பாடுகளிலும் சரி, தடுப்பூசி செயல்பாடுகளிலும் சரி வளர்ந்த நாடுகளை விட திறம்பட செயல்படுகிறோம் என்றால் அதற்கும் நம் தேசத்தின் அரசினை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும் “