இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 37,873 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 37,873 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை
304-ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,42,350-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் 36,963 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
தடுப்பூசி உபயோகத்தை பொறுத்த வரை இந்தியாவில் 72 கோடியைக் கடந்திருக்கிறது. முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 55.06 கோடி பேராகவும், இரண்டு தவணையும் எடுத்துக்கொண்டவர்கள் 17.02 கோடி பேராகவும் உள்ளனர். இந்தியாவில் 100 பேருக்கு தலா 54.08 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். சராசரியாக ஒரு நாளுக்கு 80.6 லட்சம் பேர் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.
உலகளாவிய அளவில் கொரோனோ பாதிப்பு நிலவரத்தை எடுத்துக்கொண்டால், நேற்று ஒரு நாளில் 8,50,310 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது போக தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14,307-ஆக உள்ளது. இதன் மூலம் உலகில் ஒட்டு மொத்தமாக கொரோனோ தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 46.16 லட்சமாக உயர்ந்துள்ளது.
“ கண்ணுக்கே தெரியாத நுண்கிருமி இன்று வல்லரசு நாடுகளைக்கூட கதிகலங்க வைத்திருக்கிறது. தொற்றின் தாக்கம் இன்னமும் எந்த தேசத்திலும் முழுமையாக ஓய்ந்தபாடில்லை, இந்த பேரிடர் பத்தாது என்று இதனுடன் சேர்த்து ஒரு சில நாடுகள் இயற்கையின் பேரிடரையும் சந்தித்து வருகின்றன. ‘வந்தால் எல்லாம் ஒன்றாக வரும்’ என்ற பழமொழி தான் இன்று இந்த உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பழமொழி போல “