கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,374 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 31,374 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 219-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,42,907-ஆக உயர்ந்துள்ளது.
இது போக நேற்று ஒரே நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 40,573-ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனோ மீட்பு விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதமே அதிகமாக உள்ளது. தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 73 கோடியைக் கடந்துள்ளது. இந்தியாவில் தலா 100 பேருக்கு 55.02 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர்.
உலகளாவிய அளவில் தொற்று பாதிப்பு நிலவரத்தை எடுத்துக்கொண்டால், நேற்று ஒரு நாளில் 4,71,006 என்ற அளவில் புதிய கொரோனோ தொற்று பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் 9,100 பேர் உலகம் முழுக்க தொற்றுக்கு பலியாகி உள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் உலக நாடுகள் தொடர்ந்து ஸ்தம்பித்து வருகின்றன.
“ கொரோனோவை எதிர்க்கும் சுற்றுச்சூழலை உலகநாடுகள் உருவாக்காமல், கொரோனோ சம்மந்தமான புள்ளி விவரங்களை மறைக்கும் சூழலிலேயே தொடர்ந்து ஈடுபட்டதால் தான், இன்னமும் இந்த கொரோனோ உலக நாடுகளுக்கு பேரிடர் இழைத்துக் கொண்டிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் “