இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 27,491 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 27,491 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 281-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,43,528 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,982 ஆக உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதமே அதிகமாக இருக்கிறது. தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களும் அதிகரித்து வருவதால் தடுப்பூசி உபயோகமும் 75 கோடியைக் கடந்திருக்கிறது.
உலகளாவிய அளவிலான கொரோனோ நிலவரத்தை எடுத்துக்கொண்டால், நேற்றைய ஒரு நாளில் 2,92,371 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றுக்கு உலகம் முழுக்க 5,158 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் உலகளாவிய அளவிலான ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 46.43 லட்சமாக உயர்ந்துள்ளது.
“ இரண்டு நாள் காய்ச்சல், உடல் சோர்வு அவ்வளவு தானா இந்த கொரோனோ? என்று ஒரு சிலர் கொரோனோ குறித்து அலட்சியம் காட்டி வருகின்றனர். நன்றாக புரிந்து கொள்ளுங்கள் கொரோனோவிலிருந்து மீண்டு வந்ததற்கு பிறகும் கூட, ஒரு சிலருக்கு நுரையீரல் மற்றும் உடலிய சம்மந்த பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து கொண்டு வருகிறதாம். ஆதலால் இவ்வளவு தானா கொரோனோ என்று அலட்சியம் காட்டாமல், சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு பரவலை முடிந்த அளவுக்கு தடுப்பதற்கு போராடுங்கள் “