இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30,809 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 30,809 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 296 ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,45,165 ஆக உயர்ந்துள்ளது.
இது போக இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 43,238 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தொற்று விகிதத்தை விட மீட்பு விகிதம் வெகுவாக உயர்ந்திருப்பது தெரிய வருகிறது. தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 80 கோடி என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று ஒரு நாளில் 1,697 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு தினத்தில் 27 பேர் தமிழகத்தில் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி தமிழகத்தில் 35,337 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் பாதிப்பு விகிதம் கடந்த சில நாட்களாகவே மெல்ல உயர்ந்து வருகிறது என்பது கடந்த சில நாட்களின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வருகிறது.
“ ஒரு பக்கம் மூன்றாவது அலை குறித்த பயம், இன்னொரு பக்கம் பள்ளிகள் திறப்பு, மற்றுமொரு அறிக்கை மூன்றாவது அலை பெரும்பாலும் 18 வயதிற்குள் உள்ளவரை பெரும்பாலும் தாக்கும். இதற்கிடையில் பள்ளிகளை தைரியமாக திறக்கும் முயற்சிகள் பெரும்பாலான மாநிலங்களில் கேள்வி குறியாகி வருகின்றன “