இந்தியாவில் மீண்டும் ஏறுமுகமாய் இருக்கும் கொரோனோ தொற்று!
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 37,607-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 647-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,35,788-ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினத்தை விட புதிய தொற்று எண்ணிக்கையும்,பலி எண்ணிக்கையும் இந்தியாவில் கிட்டதட்ட மூன்று மடங்காக கூடி உள்ளது.ஏறுமுகமாகவும் இறங்குமுகமாகவும் இருக்கும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை காரணமாக மூன்றாவது அலையை கணிப்பது மருத்துவ வல்லுநர்களுக்கு சவாலாகவே உள்ளது. தேசிய பேரிடர் ஆணையமோ மூன்றாவது அலை அக்டோபரில் உச்சத்தை தொடும் என கணித்துள்ளது. எதுவாகினும் இந்த சூழலில் எதையும் எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்.
மேலும் ஒட்டு மொத்தமாக இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 58.22 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 100 பேருக்கு 43.68 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். உருமாறிய கொரோனோ, புதிய தொற்று, பலி உயர்வு என்று எல்லா வகை கோணங்களும் இந்தியாவில் நிலவி வரும் நிலையில் இந்த சூழலை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டு பொறுப்புடன் நடந்தால் மட்டுமே மூன்றாவது அலையை திறனுடன் எதிர்கொள்ள முடியும்.
“ பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள், சமூக இடைவெளியை பேணுங்கள், தொடர்ந்து முகக்கவசம் அணியுங்கள் “