கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 28,149 பேருக்கு புதியாத கொரோனோ தொற்று!
நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 28,149 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 258 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது இந்தியாவில் 4,46,948 ஆக உயர்ந்துள்ளது.
இது போக கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 25,990 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். வெகுவாக தொற்றின் பாதிப்பு இந்தியாவில் குறைந்து கொண்டு வந்தாலும், ஒரிரு நாட்களாகவே இந்தியாவில் மீட்பு விகிதத்தை விட, பாதிப்பு விகிதம் சற்றே உயர்ந்து காணப்படுகிறது. தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 85 கோடியைத் தொட்டு புதிய சாதனை படைத்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் 1,724 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் 22 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி தமிழகத்தில் 35,476 ஆக உயர்ந்துள்ளது.
“ பள்ளி, கல்லூரி திறந்ததில் இருந்து ஆங்காங்கே மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. இதை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் பள்ளிகள் திறப்பை தொடர்வதா இல்லை, மீண்டும் மூடுவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர் “