கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதியதாக 44,558 பேருக்கு கொரோனோ தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 44,558 பேர் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 493-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,36,889-ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றினால் குணமாகி வெளியானோரின் எண்ணிக்கை 32,926-ஆக உள்ளது.
இந்தியாவில் ஒட்டு மொத்தமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 59.79 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் முதல் தவணையை எடுத்துக்கொண்டவர்கள் 46.33 கோடியாகவும் இரண்டாவது தவணையும் சேர்த்து தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 13.45 கோடி பேராகவும் உள்ளனர். இந்தியாவில் 100 பேருக்கு தலா 44.86 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றானர்.
உலகளாவிய அளவிலான பாதிப்பு கணக்கீடுகளை எடுத்துக்கொண்டால், நேற்றைய ஒரு நாளில் புதிய கொரோனோ தொற்று 6,58,532-ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்றினால் ஏற்படும் பலி எண்ணிக்கை 9,935-ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த உலகளாவிய கொரோனோ பலி எண்ணிக்கை 44,72,911-ஆக உயர்ந்துள்ளது.
“ ஒரு நாடு பரவலின் போதே ஒழுக்கத்தோடு உண்மையை வெளிப்படுத்தி மற்ற நாடுகளை உஷார் படுத்தி இருந்தால் இன்று கொரோனோ பரவலை கொஞ்சம் ஆவது தடுத்திருக்கலாம். பரவி விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாத நிலை என்றாலும், பரவல் என்பது இங்கு தனி மனிதனைச்சார்ந்து இருப்பதால் நாமாகிய நாமாவது, கொரோனோ கட்டுப்பாடுகளை ஒழுக்கத்தோடு கடைப்பிடிப்போம் பரவலைத்தடுப்போம் “