கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 27,022 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 27,022 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் தொற்றுக்கு 277 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,47,225 ஆக உயர்ந்து இருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் புதிய தொற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 85 கோடியைக் கடந்து இருக்கிறது. தொற்றினால் ஏற்படும் இறப்பும் இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் 100 கோடி தடுப்பூசி உபயோகத்தை எட்டி பிடிக்க இந்தியா இலக்கை நிர்ணயித்துள்ளது.
உலகளாவிய அளவில் எடுத்துக் கொண்டால், 1,79,053 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் உலகம் முழுக்க 3,408 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த உலகளாவிய கொரோனோ பலி எண்ணிக்கை 47.46 லட்சத்தை கடந்துள்ளது.
“ இயல்பு நிலை தான் திரும்பி விட்டதே என்று தினசரி கடைப்பிடித்து வரும் சின்ன சின்ன கட்டுப்பாடுகளையும் உங்களிலிருந்து தளர்த்தாதீர்கள். முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, இந்த சிறிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதால் நாம் பெரிதாய் எதையும் இழந்து விட போவதில்லை. ஆகவே விழிப்புடன் இருங்கள், கொரோனோவை வென்றிடுங்கள் “