தேசத்தில் ஆறு மாதத்திற்கு பிறகு பதிவாகி இருக்கும் குறைவான புதிய தொற்று!
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,905 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கிட்ட தட்ட ஆறு மாதத்திற்கு பிறகு இந்தியாவில் பதிவாகும் குறைவான புதிய தொற்று ஆகும். மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் தொற்றுக்கு 181 பேர் இந்தியாவில் பலியானதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,47,407 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று ஒரே நாளில் 24,237 பேருக்கும் மேலாக தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். தேசத்தில் மீட்பு விகிதம் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு வெகுவாக உயர்ந்துள்ளது. தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 86 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பெரும்பாலானோர் தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் மூலமே தொற்றின் விகிதமும், இறப்பின் விகிதமும் குறைந்து கொண்டு வருவதாக மருத்துவ வல்லுநர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை நேற்றைய தினத்தில் மட்டும் 1,657 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றுக்கு 19 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தமிழகத்தில் 35,509 ஆக உயர்ந்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
” 133 கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட நம் நாடு, நிச்சயம் பல கொரோனோ அலைகளை எதிர் கொண்டு மிகப்பெரும் உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும் என்று உலக நாடுகள் எச்சரித்து வந்தன. அதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த அளவுக்கு நாம் இந்த கொரோனோவுக்கு எதிராக போரிட்டிருப்பதே மிகப்பெரும் விஷயமாக மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர் “