இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,805 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக கொரோனோ தொற்றிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 46,805-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 514-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,37,403-ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் தொற்று குணமாகி வெளியோனோரின் எண்ணிக்கை 31,341-ஆக உள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியைக் கடந்துள்ளது. தேசத்தில் 100 பேருக்கு தலா 45.34 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். தொடர்ந்து தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் ஒட்டு மொத்தமாக இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டவர்கள் என்று பார்த்தால் வெறும் 10.2 சதவிகிதமாகவே உள்ளது என்பது தான் வேதனைக்குரிய புள்ளி விவரம்.
உலகளாவிய அளவில் எடுத்துக்கொண்டால் நேற்றைய ஒரு நாளில் 5,22,373 பேர் புதியதாக தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். 7,575 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். பண்டிகை காலமான இந்த செப்டம்பர்,அக்டோபர் எப்படி முறையாக கையாளப்படுகிறதோ அதைப் பொறுத்தே அடுத்த அலைக்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று மருத்து வல்லுநர்கள் தங்கல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
“ தடுப்பூசிகள் நோயைக்குணப்படுத்துவதில்லை, மாறாக நோயை எதிர்க்கும் வல்லமையை உங்களுக்கு தரும், ஒரு வேளை நோயினால் நீங்கள் உள்ளாக்கப்பட்டால் அந்த நோயின் தீவிரத்தன்மையிலிருந்து உங்களை மீட்கும், குறைந்த பட்சம் இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டாலே அது உங்களை நோயிற்கு எதிராக தயார்படுத்தும். ஆகவே ஒரு தவணையோடு தடுப்பூசி செலுத்திக் கொள்வதை நிறுத்திக்கொள்ளாமல் இரண்டு தவணையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். அது நிச்சயம் உங்கள் உயிருக்கு அரணாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை “