கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,222 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31,222 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் 290 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,41,042-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் ஒரு சராசரி விகிதத்திலேயே தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. தடுப்பூசி உபயோகத்தை பொறுத்தவரை இந்தியாவில் ஒட்டு மொத்தமாக அது 70 கோடியை நெருங்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒட்டு மொத்த இந்தியாவில் 69.91 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

மீட்பு விகிதத்தை எடுத்துக்கொண்டாலும் இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட அது அதிகமாகவே இருக்கிறது. நேற்று ஒரு நாளில் 42,942 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். ஒட்டு மொத்தமாக எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு இந்தியாவில் கொரோனோ கட்டுபாட்டிலேயே இருந்து வருவதாக மருத்துவ வல்லுநர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தைப்பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் 1556 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,036-ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1564-ஆக உள்ளது. தமிழகத்திலும் பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதமே அதிகமாய் உள்ளதாக தமிழக சுகாதரத்துறை அறிக்கை விடுத்துள்ளது.

“ பள்ளிகள் திறந்த பின் மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுவது பயமளிப்பதாய் இருக்கிறது, ஒரு வேளை சோதனைகளை இன்னும் முடுக்கினால் தொற்றின் உண்மையான நிலவரம் என்ன என்பது ஒவ்வொரு மாநிலங்களிலும் தெரிய வருமோ என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் பலரும் முன் வைக்கின்றனர் “

About Author