இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38,130 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 38,130 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 368 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,41,443-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றிலிருந்து விடுபட்டு குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 39,090-ஆக உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையை விட மீட்பு எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் மக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதால் தொடர்ந்து கொரோனோ இந்தியாவில் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

உலகளாவிய அளவில் எடுத்துக்கொண்டால் நேற்றைய ஒரு நாளில் மட்டும் பதிவான புதிய தொற்றின் எண்ணிக்கை 6,93,137-ஆக உள்ளது. மேலும் தொற்றினால் உண்டான பலி எண்ணிக்கை 8,764-ஆக உள்ளது. வளர்ந்த நாடுகளே கொரோனோவை இன்னும் கையாள திணறி வரும் நிலையில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா கொரோனோவை இந்த அளவுக்கு கையாண்டிருப்பதே பாராட்டுக்குரியது என்று உலக மருத்துவ கவுன்சில் தனது அறிக்கையில் பாராட்டியுள்ளது.

“ நிலைமை எதுவாகினும் இன்னும் கொஞ்ச நாளுக்கு முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளிகளை மேற்கொள்வதை கைவிட்டு விடாதீர்கள், இயல்பு நிலை என்பது இன்னும் நம்மை விட்டு தள்ளி தான் இருக்கிறது என்பதை உணர்ந்து சமூக பொறுப்புடன் செயல்படுங்கள். தேசத்தை காத்திடுங்கள் “

About Author