இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 34,457 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று,375 பேர் தொற்றுக்கு பலி
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34,457 ஆக உள்ளது. மேலும் தொற்றுக்கு ஒருநாளில் பலியானவர்களின் எண்ணிக்கையும் 375-ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கையும் 4,33,964 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் மீட்பு விகிதம் உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் வரை தேசிய மீட்பு விகிதம் 97.54 சதவிகிதமாக தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே இருந்து வருகிறது. புதிய தொற்றும் இறப்பு விகிதமும் கூட குறைந்த நிலையிலேயே இருந்து வருகிறது. இருந்தாலும் ஒரு பக்கம் டெல்டா பிளஸ் வகை கொரோனோ குறித்த பயமும் இந்தியாவில் நிலவி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 18 வரை மகாராஷ்டிராவில் 77 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனோவகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய ஒரு ஆய்வில் இந்த டெல்டா வகை கொரொனோ தொற்றும், டெல்டா பிளஸ் வகை கொரோனோ தொற்றும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் நிச்சயமாக வரக்கூடும் என்று கூறி உள்ளது. ஆனாலும் தடுப்பூசி, ஒருவர் டெல்டா பிளஸ் வகை கொரோனோ தொற்றால் பாதித்திருந்தாலும் அவரை அந்த தொற்றினால் வரும் இறப்பு என்னும் நிலையிலிருந்து மீட்கும் வல்லமை பெற்றது என்ற கருத்தையும் ஆய்வில் விளக்கி உள்ளனர்.
“ தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் தொற்று வரும். ஆனால் அவரை இறப்பிலிருந்து மீட்க வேண்டுமெனில் அவர் தொற்றுக்கு முன்னரே தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் இதுவே இந்திய மருத்துவ கவுன்சில் விடுத்துள்ள அறிக்கை, நாமோ நமக்கு விருப்பத்தில் உள்ளவர்களையோ இந்த தொற்றின் இறப்பிலிருந்து மீட்க நீங்கள் விரும்பினால் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் “