தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,531 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In TamilNadu 03 10 2021
இன்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,531 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் 23 பேர் தமிழகத்தில் கொரோனோ தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,650 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 1,582 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 4.76 கோடியாக உயர்ந்து இருக்கிறது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசிகளின் பலனை அடைந்திருக்கின்றனர்.
“ தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம்களை ஒவ்வொரு வார இறுதியும் தமிழகத்தில் அமைத்து, மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தகுதியான நபர்களுக்கு நூறு சதவிகிதம் விரைவில் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது “