கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1562 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
தமிழகத்தைப் பொறுத்த வரை கடந்த 24 மணிநேரத்தில் 1562 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 20 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி தமிழகத்தில் 34,961-ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 215 பேருக்கும் சென்னையில் 166 பேருக்கும் ஈரோட்டில் 132 பேருக்கும் புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 1684 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் வீடுகள் சேர்த்து ஒட்டு மொத்தமாக 16,478 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 3.31 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. அதில் முதல் தவணையாக தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் என்றால் 2.65 கோடி பேரும் இரண்டாவது தவணையும் சேர்த்து எடுக்கொண்டவர்கள் என்றால் 66.10 லட்சம் பேரும் ஆக இருக்கின்றனர். கடந்த ஒரு நாளில் மட்டும் ஐந்து லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
“ அதிகரிக்கும் தடுப்பூசிசெலுத்துபவர்களின் எண்ணிக்கை, ஒரு வகையில் நேர்மறையான விடயமே என்றாலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு விட்டால் அதை வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்லலாம் என்ற மக்களின் எண்ணம் மிகப்பெரிய அளவிலான பாதிப்பில் கொண்டு விட்டு விடும் என்பதே மருத்துவ வல்லுநர்களின் எச்சரிக்கை “