தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,467 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,467 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 16 பேர் கொரோனோ தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,666 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,559 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் குறிப்பிடும் படி உயர்ந்து கொண்டே வந்து கொண்டு இருக்கிறது. இன்றைய தினம் வரை தமிழகத்தில் தடுப்பூசி உபயோகம் 4.91 கோடியாக உள்ளது.

“ மூன்றாவது அலை குறித்த அறிக்கைகள் அவ்வப்போது வந்து கொண்டு இருந்தாலும், தமிழகம் அதற்கு முன்னதாகவே எல்லா செயல்பாடுகளிலும் முன்னெச்செரிக்கையுடன் செயல்பட்டு வருவது திருப்தி அளிப்பதாக இருக்கிறது “

About Author