இன்று மட்டும் தமிழகத்தில் 1,449 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In TamilNadu 05 10 2021
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,449 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 16 பேர் கொரோனோ தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,682 ஆக உயர்ந்து உள்ளது.
இது போக இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,548 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதம் பெரிதாக உயர்ந்து வருகிறது. தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 4.93 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
ஆக மொத்தத்தில் கொரோனோ தடுப்பு செயல்பாடுகள் தமிழகத்தில் திருப்தி அளிப்பதாகவே இருக்கிறது.
“ மாநிலம் நமக்கு உரியதைச் செய்கிறது, நாம் நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் அல்லவா? முடிந்தவரை அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். பரவலைத் தடுக்க முகக்கவசத்தை முறையாக அணிந்திடுங்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துடுங்கள் அவ்வளவு தான்! “