தமிழகத்தில் இன்று 1,432 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In Tamilnadu 06 10 2021
இன்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,432 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் தமிழகத்தில் 25 பேர் கொரோனோ தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,707 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக தமிழகத்தில் நேற்றைய தினத்தில் மட்டும் 1,519 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 4.96 கோடியாக உயர்ந்து இருக்கிறது. தொற்றின் விகிதம் கடந்த பத்து நாட்களை விட 200 என்ற எண்ணிக்கையில் குறைந்து இருக்கிறது. இறப்பு விகிதம் நேற்றைய எண்ணிக்கையை விட இன்று சற்றே அதிகரித்திருக்கிறது.
“ தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் தொற்று வராது என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஓரளவுக்கு தொற்றினால் உண்டாகக்கூடிய இறப்பை குறைக்கலாம், ஆதலால் முடிந்தவரைக்கும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் “