தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,608 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Update In TamilNadu 12 09 2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,608 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் தொற்றுக்கு 22 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,168-ஆக உயர்ந்துள்ளது. இது போக இன்று ஒரு நாளில் தமிழகத்தில் குணமாகி வெளியானவர்களின் எண்ணிக்கை 1,512-ஆக உள்ளது.
அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 212 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 197 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரத்தில் தமிழகத்தில் 16,473 பேர் கொரோனோ தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
” திருவிழாக்களுக்கு தடை, தடுப்பூசி முகாம்கள், ஆக்சிஜன் தன்னிறைவு என்று மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வுடன் சரியான பாதையில் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. பணிகள் தொடரட்டும். கொரோனோ ஒழியட்டும் “