தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,580 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Update In TamilNadu 14 09 2021
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மட்டும் சுமார் 1,580 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 22-ஆக உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது 35,190-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,509-ஆக உள்ளது. தடுப்பூசி உபயோகத்தை பொறுத்தவரை தமிழகம் நான்கு கோடியைக் கடந்துள்ளது.
தற்போதெல்லாம் மக்கள் பயமின்றி தாமாகவே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருவதால் தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
“ எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் தமிழகம், மருத்துவ துறையில் பெரிதாக தன்னை நிரூபித்தது இல்லை. இந்த கொரோனோ காலம் அதை நிரூபித்திருக்கிறது. தமிழகம் மருத்துவத்திலும் சிறந்த மாநிலம் என்பதை இந்த கொரோனோ காலம் நிச்சயம் நிரூபித்து விட்டே சென்றிருக்கிறது “