தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,669 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In Tamilnadu 18 09 2021
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் புதியதாக 1,669 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 35,288 ஆக உயர்ந்துள்ளது.
இது போக நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,565 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தமிழக அரசின் சார்பில் இரண்டாவது மாபெரும் தடுப்பூசி முகாம் வருகின்ற செப்டம்பர் 19 அன்று, தமிழகம் முழுக்க 40,000-ற்க்கும் மேற்பட்ட பூத்கள் அமைத்து துவங்க இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.
“ தமிழகத்தில் கொரோனோ தடுப்பு செயல்பாடுகளும் சரி, தடுப்பூசி செயல்பாடுகளும் சரி முழுமையான அளவிற்கு திருப்தி அளிப்பதாகவே இருக்கிறது. இந்த செயல்பாடுகளுக்குள் மக்கள் தங்களை தாங்களாகவே ஈடுபடுத்திக் கொள்வது என்பது அரசு மக்களிடம் எதிர்பார்க்கும் விடயமாக கருதப்படுகிறது. ஆகவே சமூக பொறுப்புணர்வுடன் உங்களை நீங்களே இந்த அரசின் செயல்பாடுகளுக்குள் புகுத்திக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் “