தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனோ தொற்று!
Increasing Corono In TamilNadu
தமிழகத்தில் மீண்டும் கொரோனோ தொற்று படிப்படியாக உயர்ந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் விடுத்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,745 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு 27 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 35,427 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் தொற்றில் இருந்து 1,624 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை தொடர்ந்து மீட்பு விகிதத்தை விட பாதிப்பு விகிதமே அதிகரித்துக்கொண்டு வருகிறது. பள்ளிகள் திறந்ததில் இருந்து குழந்தைகளுக்கு தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்படுவது தமிழகத்தில் வாடிக்கையாகி வருகிறது.
“ அதிகரித்து வரும் கொரோனோ தொற்றை கருத்தில் கொண்டு 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை திறக்க தமிழக அரசு அனுமதிக்காத நிலையில், ஏற்கனவே திறந்திருக்கும் வகுப்புகளும் விரைவில் மூட வேண்டிய சூழலும் வர வாய்ப்புள்ளதாக இன்றைய நிலவரங்கள் முடிவு செய்து வருகின்றன “